சட்டப் பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதத்தில் ஆத்தூர் ஜெயசங்கரன் (அதிமுக) பேசியதாவது:- ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய ரூ. 36 ரூபாய். அரசு ரூ.30-க்கு கொள்முதல் செய்கிறது.

பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும். தமிழகத்திலும் பால் உற்பத்தி குறைந்து வருகிறது. இதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியை விட பால் உற்பத்தி 11 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது. பால் வாங்குபவர்களும் விற்பவர்களும் ஏழைகள். எனவே, ஆவின் பால் விலையை உயர்த்த மாட்டோம். இவ்வாறு விவாதம் நடந்தது.