சென்னை: சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 18,53,115 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இது கடந்த ஆகஸ்ட் மாதத்தை விட 90,222 (5.1%) அதிகம்! ஒட்டுமொத்த பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், சர்வதேச விமான நிலையங்களுக்கு பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
சுங்கச் சோதனை என்ற பெயரில் பல மணி நேரம் பயணிகளை விமான நிலையத்தில் தங்க வைத்ததே இதற்குக் காரணம் என பயணிகள் குற்றம் சாட்டினர்.
வெளிநாடுகளில் இருந்து வரும் ஏராளமான பயணிகள், சென்னை விமான நிலையத்திற்கு வராமல், அருகில் உள்ள பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற விமான நிலையங்களுக்குச் சென்று உள்நாட்டு விமானங்கள் அல்லது சாலை வழியாக சென்னை திரும்புகின்றனர்!