கொடைக்கானல்: கொடைக்கானலில் நடைப்பயிற்சி மேற்கொண்ட சுற்றுலாப்பயணியை தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடித்ததால் பலத்த காயமடைந்தார்.
கொடைக்கானல் செட்டியார் பூங்கா அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்ட ஒடிசா சுற்றுலாப்பயணியான 69 வயது முதியவரை 5 தெரு நாய்கள் சேர்ந்து கடித்ததில் கால் ,கைகளில் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே பகுதியில் கடந்த 4 நாட்களில் 5 நபர்களை தெருநாய்கள் கடித்ததாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.