தஞ்சாவூர்: தஞ்சை உழவர் சந்தையில் காய்கறி விலைசரிவடைந்து 1 கிலோ பீன்ஸ் ரூ.44-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு திருவையாறு, கண்டியூர், திருப்பந்துருத்தி, பள்ளி அக்ரஹாரம், மருங்குளம், வேங்கராயன்குடிகாடு, கொல்லாங்கரை, கண்டிதம்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்களை அதிகாலையிலேயே கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.
இந்த காய்கறிகளை தஞ்சை நகரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வந்து வாங்கி செல்கிறார்கள். தஞ்சை உழவர் சந்தையில் கடந்த வாரத்தை விட அனைத்து காய்கறிகளும் நேற்று விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரம் ரூ.50க்கு விற்கப்பட்ட மணப்பாறை கத்தரிக்காய் நேற்று ரூ.40-க்கும், ரூ.66க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் ரூ.54க்கும், ரூ.48க்கு விற்கப்பட்ட புடலங்காய் ரூ.44க்கும், ரூ.38க்கு விற்கப்பட்ட முள்ளங்கி ரூ.26க்கும், ரூ.60க்கு விற்கப் பட்ட கொத்தவரங்காய் ரூ.36க்கும், ரூ.48க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் ரூ.36க்கும், ரூ.60க்கு விற்கப்பட்ட பீர்க்கங்காய் ரூ. 50க்கும், ரூ.24க்கு விற்கப்பட்ட பூசணிக் காய் ரூ.20க்கும், ரூ.36க்கு விற்கப்பட்ட சுரைக்காய் ரூ.20க்கும், ரூ.48க்கு விற்கப்பட்ட காலிபிளவர் ரூ.36க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதைப்போல ரூ.62க்கு விற்கப்பட்ட பீட்ரூட் ரூ.54க்கும், ரூ.72க்கு விற்கப் பட்ட பீன்ஸ் ரூ.44க்கும், ரூ.70க்கு விற்கப்பட்ட கேரட் ரூ.50க்கும், ரூ.32க்கு விற்கப்பட்ட சவ்சவ் ரூ.20க்கும் ரூ.36க்கு விற்கப்பட்ட முட்டைக்கோஸ் ரூ.30க்கும், ரூ.104க்கு விற்கப்பட்ட சாம்பார் வெங்காயம் ரூ.84க்கும் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால் தஞ்சை நகரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சந்தையில் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை அதிக அளவு வாங்கி சென்றனர்.