சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் காய்கறிகளின் விலை குறைந்திருந்த நிலையில், சிலவற்றின் விலை தற்போது அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ. 12-க்கு விற்கபட்ட நிலையில், ஆனால் இப்போது ரூ. 24 -க்கு விற்பனை ஆகிறது. வெங்காயத்தின் விலை ரூ.5 அதிகரித்து ரூ. 25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உதகை கேரட் ரூ.35-ல் இருந்து 50-க்கும் ரூ.80-க்கு விற்கப்பட்டு பீன்ஸ் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வாழைப்பூ கிலோ ரூ.25-க்கும், மிளகாய் கிலோ ரூ.40-க்கும், நெல்லிக்காய் கிலோ ரூ.100-க்கும், பட்டர் பீன்ஸ் கிலோ ரூ.65-க்கும், அவரைக்காய் ரூ.60-க்கும், முட்டைகோஸ் கிலோ ரூ.10-க்கும், சுரைக்காய் கிலோ ரூ.25-க்கும் விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளரி ரூ.20-க்கும், கத்தரிக்காய் ரூ.65-க்கும், கொத்தவரங்காய் ரூ.40-க்கும், காலிபிளவர் ரூ.20-க்கும், கேரட் ரூ.35-க்கும், முருங்கை ரூ.120-க்கும், தேங்காய் ரூ.35-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சியை வியாபாரிகள் ரூ.80-150 கிலோ, பீன்ஸ் ரூ. 50, பூசணி கிலோ ரூ. 25, பலாப்பழம் கிலோ ரூ. 40, வெண்டைக்காய் கிலோ ரூ. 60 கிலோ, முள்ளங்கி ரூ. 25, வெற்றிலை ரூ. 50 கிலோ, பலாப்பழம் ரூ. 40, மாம்பழம் கிலோ ரூ. 120 விற்பனை செய்து வருகிறார்கள்.