சென்னை: கடந்த 20 ஆண்டுகளாக சீமான் பேச்சை கேட்கவில்லையா ? இப்போதுதான் முதன்முறையாக கேட்கிறீர்களா ? என்று சீமான் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியு்ள்ளது.
நீதித்துறையை அவமிதிக்கும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணையின்போது, சீமான் பேச்சுகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால் இதுவரை 100 வழக்குகளாவது தாக்கல் செய்திருக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 20 ஆண்டுகளாக சீமான் பேச்சை கேட்கவில்லையா ? இப்போதுதான் முதன்முறையாக கேட்கிறீர்களா ? என்று சீமான் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியு்ள்ளது.
நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில் வீடியோ ஆதாரங்களை பார்த்துவிட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.