திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- தமிழ் புத்தாண்டையொட்டி சித்திரை முதல் நாளான ஏப்.14-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து தீர்த்தவாரி, உச்சிகால அபிஷேகம் நடக்கிறது.

காலை 10 மணிக்கு மேல் சண்முகருக்கு அன்னாபிஷேகம் மற்றும் இதர பூஜைகள் நடைபெறும். மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜையும், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை மற்றும் இதர பூஜைகள் நடைபெறும். காலை 8 மணிக்கு நாதஸ்வர மங்கள இசையும், 8.30 மணிக்கு தேவார இசையும், 9 மற்றும் 12 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.