சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:- இந்தியாவில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் ஆன நிலையில், அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தியிருக்க வேண்டும்.

அப்படி ஒரு ஆய்வு நடத்தப்பட்டிருந்தால் மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்க நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பதை உணர்ந்து அதை ரத்து செய்ய முடிவு செய்திருக்கும். இனியும் காலம் தாழ்த்தாமல் மாணவர்களை பலிவாங்கும் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
கல்வியை விட வாழ்க்கை முக்கியம் என்பதை மாணவர்கள் உணர்ந்து தற்கொலை முயற்சியை கைவிட வேண்டும்.