சென்னை: பொதுவாக உடல் எடையை குறைக்க சிலவகை பானங்களை பின்பற்றினாலே நன்மைகளை பெற முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றார்கள்.
இந்த பானங்கள் உங்க வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. அந்தவகையில் உடல் எடையை குறைக்க கூடிய சூப்பரான பானம் ஒன்றினை எப்படி செய்வது என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அன்னாசிபழம் – 11/2 கப்
லெமன் ஜூஸ் – 2 1/2 டேபிள் ஸ்பூன்
இலவங்கப்பட்டை தூள்
கருப்பு உப்பு (சுவைக்கேற்ப) – 1 டீஸ்பூன்
செய்முறை: அன்னாசிப்பழத்தை ஒரு சிறிய துண்டுகளாக வெட்டி பிளண்டரில் போட்டுக் கொள்ளுங்கள்.
அதை நன்றாக அரையுங்கள் இப்பொழுது அன்னாசி பழச்சாற்றை ஒரு கிளாஸில் ஊற்றி அதில் பட்டை பொடி, லெமன் ஜூஸ் மற்றும் கருப்பு மிளகு சேர்த்து கலக்குங்கள்.
இது உங்களுக்கு ஒரு நல்ல சுவையை தரும். இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள் உங்களுக்கு நல்ல எடை இழப்பை கொடுக்கும்.