சென்னை: வங்கக்கடலில் நிலவி வரும் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, பிப்., 26 முதல், 28 வரை, மூன்று நாட்களுக்கு, நாகை – இலங்கை இடையே, கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி தமிழ்நாட்டின் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு இந்தியா-இலங்கை இடையே ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை மற்றும் பல்வேறு காரணங்களால், அதே மாதம் 23-ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு, ‘சிவகங்கை’ என்ற பெயரில் மீண்டும் நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் இயக்க சுபம் என்ற கப்பல் நிறுவனம் முடிவு செய்து, கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது. வாரத்தில் ஐந்து நாட்கள் கப்பல் இயக்கப்பட்டது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக சில மாதங்களுக்கு முன்பு தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கப்பல் சேவை கடந்த 22-ம் தேதி மீண்டும் தொடங்கியது. தினமும் காலை 7.30 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்டு 11.30 மணிக்கு காங்கேசன் துறைமுகத்தை வந்தடையும் கப்பல், அங்கிருந்து மதியம் 2.30 மணிக்கு மறுபுறம் புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு நாகை சென்றடைகிறது.
இந்த சேவையை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் நேற்று முதல் 28ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வங்கக் கடலில் பலத்த காற்று வீசி வருகிறது.
இதனால் கப்பலை இயக்க முடியாது என்றும், இதனால் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தற்காலிகமாக கப்பல் சேவை நிறுத்தப்படும் என்றும், மார்ச் 1-ம் தேதி முதல் கப்பல் சேவை வழக்கம் போல் நடைபெறும் என கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம் அறிவித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நாகாலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மூன்று நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது, இது சுற்றுலாப் பயணிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.