ராமேஸ்வரம்: பாம்பன் படகு மீனவர்கள் 8 நாட்களுக்கு பிறகு இன்று (ஆக.18) கடலுக்கு சென்றனர். கடந்த 8-ம் தேதி அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்ட்டின் ஆகியோருக்கு சொந்தமான 4 நாட்டுப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து, பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 35 மீனவர்களை கைது செய்தனர்.
35 மீனவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் புத்தளம் வாரியபொல சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பாம்பன் பாலம் அருகே சாலை மறியல் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தனர். இதையடுத்து ராமேசுவரம் வட்டாட்சியர் மீன்வளத்துறை இணை இயக்குநர் தலைமையில் பாம்பன் மீனவர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண அரசு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் மறியல் மற்றும் பாம்பன் பாலம் சாலை மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில், எட்டு நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை பாம்பனில் இருந்து 150க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.