ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் 67.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.8) நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 78 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தற்போது 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.,