மூணாறு: கேரளாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மூணாறு அருகே டாப் ஸ்டேஷன் சாலையில் சுமார் 20 கிமீ தொலைவில் குந்தலா அணை உள்ளது. இந்த அணையை மின்சார வாரியம் பராமரித்து வருகிறது. அணையில் ஹைடல் டூரிசம் சார்பில் பெடல் மற்றும் துடுப்பு படகுகள், தேனிலவு தம்பதிகளுக்கு காஷ்மீரி சிகாரியா படகுகள் இயக்கப்படுகின்றன.
சுற்றுலா பயணிகள் மிதி படகுகளில் சவாரி செய்வதை மிகவும் விரும்புகின்றனர். இரண்டு பேருக்கு 30 நிமிட பயணத்திற்கு ரூ. 400 மற்றும் 4 பேர் பயணம் செய்ய 600 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளனர். தற்போது மூணாறில் குளிர் காலம் துவங்கி உள்ளதால் குண்டலா அணையின் இயற்கை சூழலில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். காஷ்மீர் சிக்காரியா படகுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால் அதில் பயணம் செய்து புகைப்படம் எடுக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.