தேனி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனியில் இருந்து 54 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மேகமலை அருவி, விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பிரபலமான இடமாகும். மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ளதால், மேகமலை அருவியும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும்.
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்யும் போது, அருவியில் நீர்வரத்து அதிகரித்தால், மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பது வழக்கம். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேகமலை அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.