தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரத்தநாட்டில் 31 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
ஒரத்தநாடு 31, நெய்வாசல் தென்பாதி 28, குருங்குளம் 24.4, வெட்டிக்காடு 21.8, அதிராம்பட்டினம் 17.4, மதுக்கூர் 14.6, பேராவூரணி 14.2, தஞ்சாவூர் 13.5, ஈச்சன்விடுதி 12, பட்டுக்கோட்டை 8, வல்லம் 7, மஞ்சளாறு 3.8, திருவிடைமருதூர், அணைக்கரை தலா 2, கும்பகோணம், பாபநாசம் தலா 1.
இதேபோல, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை பகலில் இடைவெளி விட்டுவிட்டு மிதமானது முதல் பலத்த மழை பெய்தது.
மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில், சாகுபடி நிலங்கள் காய்ந்து கிடந்தன. இந்நிலையில், 2 நாட்களாக பெய்து வரும் மழை கோடை நெல், உளுந்து, எள், நிலக்கடலை, மக்காசோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த மழை காரணமாக சம்பா, தாளடி பருவ நெல் பயிர்களை அறுவடை செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.