சேலம்: சேலம் உருக்காலையில் மத்திய எஃகுத்துறை அமைச்சர் குமாரசாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் உருக்காலையை விரிவாக்கம் செய்ய எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.
சேலம் உருக்காலை உள்பட தென்னிந்தியாவில் உள்ள 3 முக்கிய உருக்காலைகளை விரிவாக்கம் செய்வது குறித்து டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாக மத்திய எஃகுத்துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.
சேலம் உருக்காலையை பார்வையிட்ட பிறகு செய்தியாளரை சந்தித்த அவர், உருக்காலையை விரிவாக்கம் செய்ய எவ்வளவு முதலீடு தேவைப்படும், முதலீடு செய்யப்படும் பணத்தை எவ்வாறு திரும்ப எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது என்றார்.