மதுரை: முழு கொள்ளளவை எட்டியுள்ளது வைகை அணை. இதனால் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனியின் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இதனால் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது 5,169 கனஅடியாக உள்ள உபரி நீர் திறப்பு, படிப்படியாக அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கரையோரம் வசிப்பவர்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனியில் நேற்றுமுன்தினம் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து பெரும்பாதிப்பு ஏற்பட்டது.