தர்மபுரி: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதாலும், தற்போது ஃபென்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாலும், நீர்நிலைகள் நிரம்பி குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஒகேனக்கல், சிறுவாணி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று அப்பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.