சென்னை: வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் எடுத்துள்ள முக்கிய தீர்ப்பு, இஸ்லாமிய சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வக்ஃப் திருத்தச் சட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர்கள் நியமிக்கக்கூடாது எனவும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வக்ஃப் சொத்துகள் மீது எந்த புதிய நடவடிக்கையும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். இது இஸ்லாமியர்களுக்கு ஆதரவு தரும் தீர்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு வகுத்திருந்த பாசிச அணுகுமுறைக்கு எதிராக இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாகவும், இது இஸ்லாமிய சமூகத்தின் வயிற்றில் பாலை வார்ந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார். இவர்கள் உரிமைகளை பாதுகாக்க வெற்றிக் கழகம் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தும் என்றும் உறுதி தெரிவித்தார்.
அத்துடன், இந்த வழக்கில் நீதிக்காக சுட்டுக்காட்டிய மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங் வி மற்றும் அவரது சட்டக்குழுவிற்கு நன்றி தெரிவித்த விஜய், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தனது கட்சி என்றும் உறுதியாக துணைநின்று செயல்படும் என உறுதியளித்தார்.