தஞ்சாவூர்: ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நில அளவை அலுவலர்கள் ஒரு நாள் அடையாள காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், மாவட்டத் தலைவர் டேனியல் மார்க்ஸ் தலைமையில் மனித சக்திக்கு மீறிய பணிகளை ரத்து செய்ய வேண்டும்,ஆய்வாளருக்கும் துணை ஆய்வாளருக்கும் இடையிலான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
காலி பணியிடத்தை நிரப்பிட வேண்டும். புற ஆதார முறையில் பணியாளர்கள் நியமிப்பதை கைவிட வேண்டும். தேர்வாணையத்தின் அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்த முறை பணிகளை நீக்க வேண்டும். உட்பிரிவு பணிகளை நில அளவை அலுவலர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 18- அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஒரு நாள் அடையாள காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.