தஞ்சாவூர்: திருத்தலங்களை தரிசிக்க சனி, ஞாயிற்று கிழமையில் தரிசனம் செய்வதற்கு சிறப்புப் பேருந்து இயக்கப் போவதாக வந்துள்ள ோக்குவரத்துக் கழக அறிவிப்புக்கு தேசிய திருக்கோயில் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய பொதுச் செயலர் வழக்கறிஞர். சந்திரபோஸ், மாவட்டத் தலைவர் ஆதி. நெடுஞ்செழியன் கூறுகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் குடந்தை கோட்டம் சார்பில் டெல்டா மாவட்ட முருகப்பெருமான் ஆலயங்களாகிய எண்கண் சுப்பிரமணிய சாமி கோயில், நாகை சிக்கல் சிங்காரவேலன்கோயில், பொரவாச்சேரி கந்தசாமி கோயில், எட்டுக்குடி சுப்பிரமணிய சாமிகோயில், ஏரகரம் ஆதி சுவாமிநாதசாமி கோயில், சுவாமிமலை சுவாமிநாதசாமி கோயில் ஆகிய திருத்தலங்களை தரிசிக்க சனி ஞாயிறு தரிசனம் செய்வதற்கு சிறப்புப் பேருந்து இயக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இதை தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு வரவேற்கிறது. பேருந்துகள் டெல்டா மாவட்ட தலைநகர்களிலிருந்து ஒரே நேரத்தில் புறப்பட ஏற்பாடு செய்தால் சிறப்பாக அமையும் என்ற கருத்தையும் முன்வைக்கிறது.
கூட்டமைப்பு அரசுக்கும் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.