சென்னை: ஊதிய ஒப்பந்தம் தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு வெளியாகும் என போக்குவரத்து தொழிலாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் 1.08 லட்சம் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டுள்ளது. அந்த வகையில், 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி நடந்தது.
இதில், 85 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். முதல்கட்ட பேச்சுவார்த்தை என்பதால், அறிமுக கூட்டமாக நடத்தப்பட்டது. ஆனால், முதல்கட்ட பேச்சு வார்த்தை நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாதது தொழிலாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், “அடுத்த பேச்சுவார்த்தையில் பேச வேண்டிய பிரச்னைகள் குறித்து அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆயுதபூஜை, தீபாவளியை தொடர்ந்து பண்டிகைகள் வருகின்றன. இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பான அறிவிப்பும் வருகிறது.
இந்த நிலையில், பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்பில் தாமதம் ஏற்படக்கூடாது, போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை கட்டாயப்படுத்தாமல் விரைவாக பேச்சுவார்த்தை நடத்தி புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.