ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதை கண்டித்து கடலில் இறங்கி உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 நாட்டுப்படகுடன், கைது செய்யப்பட்ட 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாம்பன் சாலை பாலத்திலும் ஒரு குழுவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் மதுரை – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.