விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை பரவலாக மழை பெய்தது. அதன்படி அதிகபட்சமாக விழுப்புரத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் தொடர்ந்து 2 நாட்களாக 35 சென்டிமீட்டர் மழை பெய்ததால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
தமிழகத்தின் சில பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஆக.12) முதல் 17ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை பரவலாக மழை பெய்தது. அதன்படி அதிகபட்சமாக விழுப்புரத்தில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் மீண்டும் மழைநீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்தது.
மேலும், நகரின் பரந்த பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், தெருக்களில் தண்ணீர் தேங்கியது. இதனால், 300க்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன. விழுப்புரத்தில் தொடர்ந்து 2 நாட்களில் 35 செ.மீ மழை பெய்துள்ளதால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.