சென்னை: பெட்ரோலியம் ஜெல்லி சருமத்திற்கு எந்த வகையில் உபயோகம் ஆகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாசலின் பயன்பாட்டில் உள்ளது. இதை உதடு ஈரப்பதமாக்குவதை தவிர வேறு எதற்கும் பயன்படுத்தப்படுவது கிடையாது. வெண்மையான பளபளப்பு நிறத்தில் உள்ள இந்த களிம்பில் மருத்துவ குணாதிசய சூத்திரங்கள் பல அடங்கியுள்ளது.
உதடுக்கு தடவுவது மட்டுமின்றி இது பல்வேறு பயன்பாட்டுக்கு உகந்தது. தீக்காயத்தை குணமாக்குவது மற்றும் சொறிக்கு மருந்தாக பயன்படுவதோடு இந்த பெட்ரோலியம் ஜெல்லி ஷூ ஷைனர் உள்ளிட்ட பல வகையான வேலைகளுக்கு உதவியாக இருக்கிறது.
லிப் ஸ்கர்ப்:வெறும் உதடு களிம்பை பயன்படுத்துவதால் மட்டும் உங்களது உதடு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாது. வாசிலின் லிப் ஸ்கர்ப் உங்களது உதட்டை உறித்து சிறந்த வெளிப்பாட்டை கொடுக்கும். கடைகளில் கிடை க்கும் அதிக விலை கொண்ட உதடு களிம்புகளுக்கு இது சிறந்த எதிரியாகும். கொஞ்சம் வாசலினுடன் சிறிதளவு சர்க்கரையை நன்றாக கலக்க வேண்டும்.
இதை சாதாரணமாக உதட்டின் மீது பூசுங்கள். அப்படியே லேசாக மசாஜ் செய்த கொடுத்தால் நல்ல முடிவு கிடைக்கும். இப்போது நீங்கள் பூசியதை துடைத்துவிடுங்கள். இதன் பின்னர் உங்களது உதட்டு களிம்பை தடவிட்டால் நீங்கள் வெளியில் செல்ல தயாராகவிடலாம்.
கால் பாத வெடிப்பை குணப்படுத்தவும், மென்மையான பாதங்களை பெறவும் வாசலின் சிறப்பான சிகி ச்சையை அளிக்கும். இந்த மென்மையான களிம்பு, உங்களது பாதங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். அதோடு உங்களது முழு உடலையும் மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவும். தினமும் இரவில் படுக்கும் போது பாதம் முழுவதிலும் வாசிலினை தடவிவிட்டு அதன் மேல் சுத்தமான சாக்ஸை அணிந்து கொண்டு தூங்குங்கள்.
பெட்ரோலியம் ஜெல்லியில் உள்ள எண்ணெய் பாதத்தில் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைத்திருக்கும். இதர தண்ணீர் சார்ந்த லோஷன்களை விட இது அதிக நேரம் தங்கியிருக்கும். இது விரைந்து குணப்படுத்த உதவும்.