பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், 120 அடி ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால், டிசம்பர் வரை அணையின் நீர்மட்டம் 110 அடிக்கு மேல் இருந்தது. அதன்பின் மழை குறைந்தாலும் அணைக்கு வினாடிக்கு 350 கனஅடி வரை தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாத இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கி, மழை பெய்யாததால் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
தற்போது அணையின் நீர்மட்டம் 63 அடியாக குறைந்துள்ளது. இதனால், அணையின் பெரும்பகுதி மணல் திட்டுகள், சேறு, பாறைகளால் மூடப்பட்டுள்ளது. கோடை மழை பெய்தால் தான் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கோடை காலத்தில் ஆழியாறு அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. விவசாய பாசனத்திற்கு வண்டல் மண் எடுக்க இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அப்போது அணையின் பின்புறம் குறிப்பிட்ட பகுதியில் வண்டல் மண் எடுக்கப்பட்டு மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது.

அரை டிஎம்சி வரை தண்ணீர் தேங்கியதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆழியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்து வறண்டு உள்ளதால் அணையில் தண்ணீர் இல்லாத இடங்களில் தூர்வாரவும், விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆழியார் நீர்தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாக ஆழியாறு அணையில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டது.
அதேபோல் இந்த ஆண்டும் ஆழியாறு அணையில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும். ஆழியாறு அணையில் தூர்வாரப்பட்டு நீர்மட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். நீர்நிலைகளை தூர்வாரி, அதில் உள்ள வண்டல் மண்ணை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதன் மூலம், நீர்நிலைகளின் மழைநீர் சேமிப்பு திறன் பாதுகாக்கப்படுகிறது.
நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கிறது, வளம் அதிகரிக்கிறது, பயிர் உற்பத்தி திறன் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. எனவே, இந்த ஆண்டும் ஆழியாறு அணையில் வண்டல் மண் எடுக்க அரசு முறையான உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.