இந்தியாவில் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பிரத்யேக தள்ளுபடிகளை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. கோடைக்காலம் முடிவடைவதால், ஆப்பிள் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “பேக் டு ஸ்கூல்” விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையானது, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மேம்பட்ட கல்வி அனுபவங்களுக்குத் தேவையான டூல்ஸ்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான தொகுப்பாகும்.
ஜூன் 20ஆம் தேதி தொடங்கிய இச்சலுகையானது, செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஆப்பிள் BKC மற்றும் ஆப்பிள் Saket ஸ்டோர்களிலும், ஆப்பிள் ஸ்டோர் இணையதளத்திலும் கிடைக்கும். மேக்புக் ப்ரோ, மேக்புக் ஏர், ஐமாக், ஐபாட் ஏர், மேக் மினி மற்றும் ஐபேட் ப்ரோ உள்ளிட்ட பல்வேறு ஆப்பிள் தயாரிப்புகளை சிறப்பு தள்ளுபடி விலையில் வாங்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு “பேக் டு ஸ்கூல்” விற்பனை ஒரு அற்புதமான வாய்ப்பாகும். தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் பென்சில் ப்ரோ மற்றும் மேஜிக் கீபோர்டு போன்ற உபகரணங்களையும் சிறப்பு தள்ளுபடி விலையில் வழங்குகிறது.
கூடுதலாக ஆப்பிள் பென்சில் மற்றும் ஏர்போட்கள் போன்ற இலவச ஆக்சஸெரீகளை ஐபாட் மற்றும் மேக் பிசிக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுடன் நிறுவனம் வழங்குகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் ஆப்பிள்கேர் பிளஸ்-இல் 20 சதவீத தள்ளுபடியையும், ஆப்பிள் டிவி பிளஸ் மற்றும் ஆப்பிள் மியூசிக் ஆகியவற்றிற்கு மூன்று மாத இலவச அக்சஸ்களையும் ஆப்பிள் வழங்குகிறது. ட்ரைல் பீரியட்க்கு பிறகு மாணவர்கள் தங்கள் சப்ஸ்கிரிப்ஷன்களை மாதத்திற்கு ரூ.59 தள்ளுபடி விலையில் தொடரலாம்.
இந்தியாவில் ஆப்பிள் பேக் டு ஸ்கூல் விலைகள்:
11 இன்ச் iPad Pro M4:ரூ. 89,900
13 இன்ச் iPad Pro M4:ரூ. 1,19,900
ஆப்பிள் பென்சில் ப்ரோ: ரூ 10,900
ஆப்பிள் பென்சில் USB-C:ரூ 6,900
11 இன்ச் மேஜிக் கீபோர்டு: ரூ.27,900
13 இன்ச் மேஜிக் கீபோர்டு: ரூ 31,900
11 இன்ச் ஐபேட் ஏர் எம்2: ரூ 54,900
13 இன்ச் ஐபேட் ஏர் எம்2: ரூ 74,900
13 இன்ச் மேக்புக் ஏர் எம்3: ரூ 1,04,900
15 இன்ச் மேக்புக் ஏர் எம்3: ரூ 1,24,900
13 இன்ச் மேக்புக் ஏர் எம்2: ரூ 89,900
14 இன்ச் மேக்புக் ப்ரோ எம்3: ரூ 1,58,900
14 இன்ச் மேக்புக் ப்ரோ எம்3 ப்ரோ: ரூ 1,84,900
16 இன்ச் மேக்புக் ப்ரோ: ரூ 2,29,900
iMac M3: ரூ 1,29,900
Mac Mini M2 : ரூ 49,900
M2 Pro உடன் Mac Mini: ரூ 1,19,900
இந்த சலுகைகளைப் பெற விரும்புவோர், பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் UNiDAYS மூலம் தங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மெமரி, கிராபிக்ஸ், சேமிப்பு மற்றும் வண்ணம் போன்றவற்றில் சரிசெய்தல் போன்ற மேக்களுக்கான ஆப்ஷன்களை வாடிக்கையாளர்கள் பெறலாம். மேலும், கல்வி நோக்கங்களுக்காக தங்கள் டிவைஸ்களின் செயல்பாட்டை மேம்படுத்த ஃபைனல் கட் ப்ரோ, ப்ரோ கிரியேட், லாஜிக் ப்ரோ மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் போன்ற அத்தியாவசிய ஆப்ஸ்களையும் ஆப்பிள் வழங்குகிறது.
இதற்கிடையில், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் இதே சலுகையை ஜூலை இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பேக் டு ஸ்கூல் விற்பனை ஆனது ஏற்கனவே நியூசிலாந்து, பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் இந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி தொடங்கி மார்ச் 13ஆம் தேதி வரை நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.