இந்த நாட்களில், கூகுள் இல்லாமல் உலக இயக்கம் இல்லை. எந்தத் தேவை வந்தாலும் உடனே செல்போன் மூலம் தேடுவது வழக்கமாகிவிட்டது. கூகுள் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுடன் செயல்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை அதன் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 10 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் பணிபுரிபவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். மேலாளர், இயக்குநர், துணைத் தலைவர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும், “நிறுவனத்தின் செயல்திறனை இரட்டிப்பாக்க இந்த பணிநீக்கம் செய்யப்படுகிறது.

நிர்வாகத் துறையில் சிலரை பணி நீக்கம் செய்து அனுப்புவார்கள். சில பதவிகள் வேறு துறைகளுக்கு மாற்றப்படும்,” என்றார். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், 2023 ஜனவரியில் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.அதைத் தொடர்ந்து, நிர்வாகத் துறையில் பணியாற்றும் 10 சதவீத பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் 4 பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.