இந்தியாவில் மின்சார வாகனங்கள் பெரிதும் பரவிவருகிறது. அதில் முக்கிய இடம் பெற்றுள்ளவை, குறைந்த வேகத்தில் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள். இந்த வகை ஸ்கூட்டர்கள் ஓட்டுநர் உரிமம் (DL) மற்றும் வாகன பதிவு (RC) தேவையில்லாமல் சாலைகளில் இயக்கப்படலாம். இதனால் மாணவர்கள், மூத்த குடிமக்கள், மற்றும் தினசரி அலுவலகம் அல்லது அருகிலுள்ள கடைகளுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு இவை சிறந்த தீர்வாக இருக்கின்றன.

இந்த ஸ்கூட்டர்கள் 250 வாட் அல்லது அதற்கு குறைவான மொட்டார் சக்தியுடன், அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில்தான் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் இப்போது பல வகையான குறைந்த வேக மின்சார ஸ்கூட்டர்கள் கிடைக்கின்றன. அவற்றில் முதலில் குறிப்பிட வேண்டியது ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்திய “Kick” மாடல். ரூ.39,999க்கு கிடைக்கும் இந்த மாடல், ஒரு சார்ஜில் 112 கி.மீ வரை பயணிக்கக்கூடிய திறன் கொண்டது. இதன் பேட்டரி நீக்கக்கூடியது, 4 முதல் 5 மணி நேரத்தில் முழு சார்ஜ் ஆகும்.
இதேபோல், லோகியா ஓமா ஸ்டார் மாடல் 70 கி.மீ வரை செல்லக்கூடியது, விலை சுமார் ₹41,444. மூன்றாவது முக்கிய மாடலாக Komaki நிறுவனத்தின் “XGT KM” மாடல் இருக்கிறது. இது 150 கி.மீ வரை செல்லக்கூடியது, அதற்கான விலை சுமார் ₹42,500. வேகம் சற்று அதிகமாக – 60 கி.மீ/மணிக்கு செல்கிறது.
மேலும் Ampere நிறுவனத்தின் “Reo Elite” மாடலும், 55–60 கி.மீ வரையிலான பயணத்துக்காக அமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ₹42,999. ஓலா நிறுவனத்தின் புதிய மாடல் S1 X, ₹59,999க்குக் கிடைக்கிறது. இதில் 1.5 கிலோவாட் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது 90 கி.மீ வரையிலான பயணத் திறன் கொண்டது.
இந்த ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை என்றாலும், பயணத்தின் போது பாதுகாப்பிற்காக ஹெல்மெட் அணிவது அவசியம். குறைந்த செலவில் பயணிக்க விரும்பும் அனைவருக்கும் இவை சிறந்த மாற்றாக அமைந்துள்ளன. பராமரிப்பும் எளிது, சார்ஜ் செலவும் குறைவு என்பதாலேயே இவை நாளுக்கு நாள் பிரபலமடைந்துவருகின்றன.
இந்த வகை மாடல்களுக்கு விருப்பம் உள்ளவர்கள், மேலும் விபரங்களுக்கு மற்றும் விலைப்பட்டியலுக்காக உத்தியோகபூர்வ தளங்களை பார்வையிடலாம். இப்போதெல்லாம் பள்ளி மாணவர்கள் முதல் வீட்டு உரிமையாளர்கள் வரை அனைவரும் இந்த மின்சார ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துகிறார்கள். இது சுற்றுச்சூழலுக்கு நல்லது என்பதால் இது ஒரு பசுமையான யோசனையும் கூட.