மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மொபைலான மோட்டோ எஸ்50 நியோ ( Moto S50 Neo) ஸ்மார்ட் ஃபோனை சமீபத்தில் சீனாவில் வெளியிட்டது. இந்த புதிய தயாரிப்பின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், நான்கு ஆண்டுகளுக்கான உத்தரவாதத்தை நிறுவனம் வழங்குகிறது.
இந்த புதிய ஸ்மார்ட் ஃபோனில் கர்வ்ட் POLED ஸ்கிரீன், 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட் மற்றும் டால்பி அட்மாஸ் சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் உள்ளன.
4 வருட வாரண்டி:
Moto S50 Neo மொபைலின் முக்கிய சிறப்பம்சமாக பார்க்கப்படுவது 4 ஆண்டுகளுக்கான உத்தரவாதத்துடன் வரும் உலகின் முதல் ஸ்மார்ட் ஃபோன் என மோட்டோரோலா நிறுவனம் அறிவித்திருப்பது தான். எனினும் நிறுவனம் இந்த மொபைலை இந்தியாவில் அறிமுகப்படுத்தும்போது, இந்த சலுகையோடு அறிவிக்குமா என்பது பற்றிய தகவல் ஏதும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. மோட்டோ-வின் S50 Neo மொபைலின் ஸ்பெசிஃபிகேஷன்கள்…
இந்த புதிய மோட்டோ மொபைல் 1600nits பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட 6.7-இன்ச் pOLED கர்வ்ட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த மொபைலில் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது 12GB வரையிலான ரேம் மற்றும் 512GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வருகிறது. இந்த மொபைலில் 50MP பிரைமரி சென்சார் மற்றும் 8MP செகண்டரி சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது. முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக 32MP ஷூட்டரை கொண்டுள்ளது. மேலும் இதில் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. விலை விவரங்கள்…
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ எஸ்50 நியோ மொபைலை மொத்தம் 3 வேரியன்ட்ஸ்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை CNY 1,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,000).
12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை CNY 1,599 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18,400). 12GB ரேம் + 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை CNY 1,899 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21,800). இந்த மொபைலின் உலகளாவிய அல்லது இந்திய வெளியீட்டை மோட்டோரோலா நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எனினும் தற்போது சீனாவில் மட்டும் கிடைக்கும் இந்த S50 Neo மொபைல் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.