JBL நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் தனது பிரீமியம் TWS இயர்பட்ஸ் தயாரிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 2024-ல் CES வெளியிடப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் தற்போது Live Beam 3 என்ற TWS இயர்பட்ஸை ஜேபிஎல் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த புதிய ஜேபிஎல் லைவ் பீம் 3 ஹை-ரெஸ் ஆடியோ தரத்தில் கவனம் செலுத்துகிறது, ஆனால் டிஸ்ப்ளேயுடன் கூடிய தனித்துவமான ஸ்மார்ட் சார்ஜிங் கேஸை உங்களுக்கு வழங்குகிறது. இந்த வயர்லெஸ் ஹெட்செட் 1.45-இன்ச் டச் ஸ்கிரீனுடன் கூடிய ஸ்மார்ட் சார்ஜிங் கேஸை கொண்டுள்ளது, இது வால்யூம் மற்றும் ஈக்வலைசர் கன்ட்ரோல்ஸ்களை யூசர்களுக்கு வழங்குகிறது. மேலும் இந்த புதிய JBL Live Beam 3-ஆனது hi-res ஆடியோ குவாலிட்டியில் கவனம் செலுத்துகிறது.
ஜேபிஎல் நிறுவனத்தின் Live Beam 3-ன் விலை எவ்வளவு?
லைவ் பீம் 3 TWS இயர்பட்ஸ்கள் இந்தியாவில் ரூ.24,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் ஆன்லைனில் லைவ் பீம் 3 இயர்பட்ஸின் விலை ரூ.13,999 மட்டுமே. இது சோனி நிறுவனத்தின் WF-1000XM5 மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் AirPods Pro 2nd gen உள்ளிட்ட தயாரிப்புகளை போல பிரீமியம் கேட்டகிரி தயாரிப்பு ஆகும். மேலும் கருப்பு, நீலம் மற்றும் சில்வர் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் லைவ் பீம் 3 கிடைக்கிறது. அமேசான் தவிர இந்த இயர்பட்ஸ் தற்போது ஜேபிஎல் இந்தியா மற்றும் Harman Audio வெப்சைட்ஸ்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.
JBL Live Beam 3-ன் ஸ்பெசிஃபிகேஷன்கள்…
லைவ் பீம் 3-ஆனது 1.45-இன்ச் டச் டிஸ்ப்ளே மூலம் நம் கண்களை கவர்கிறது, இது மியூசிக் பிளேபேக்கை கன்ட்ரோல் செய்வது மட்டுமல்லாமல், யூஸர்களுக்கு அவர்களின் மொபைலுக்கு வரும் மெசேஜ்களை காண்பிக்கும். மேலும் இது 10மிமீ டைனமிக் டிரைவர்ஸ்களுடன் வருகிறது. இது தவிர, யூஸர்கள் தங்களுக்கு வரும் கால்ஸ்களை நிர்வகிக்க இதன் ஸ்மார்ட் கேஸ்-ஐ பயன்படுத்த முடியும். வாய்ஸ் கால்ஸ் மற்றும் வீடியோ கான்ஃபிரன்ஸ்களின்போது தெளிவான அழைப்பு தரத்திற்காக JBL லைவ் பீம் 3-ஆனது 6 மைக்ரோ ஃபோன்களைக் கொண்டுள்ளது.
இந்த இயர்போன்ஸ்கள் ஒவ்வொன்றிலும் 68mAh பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சார்ஜிங் கேஸ் 680mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனால் சார்ஜிங் கேஸ் 72 கிராம் எடையைக் கொண்டுள்ளது. ANC ஆன் செய்யப்பட்டிருந்தால் லைவ் பீம் 3 சுமார் 12 மணி நேரம் நீடிக்கும் என்றும், சார்ஜிங் கேஸ் மூலம் 30 மணிநேரத்திற்கு மேல் நீடிக்கும் என்றும் JBL நிறுவனம் கூறுகிறது. தவிர JBL நிறுவனம் இந்த தயாரிப்புடன் ஹை-ரெஸ் ஆடியோ கன்டென்டை அணுகவும், அவற்றை ப்ளூடூத் மூலம் LDAC கோடெக்கில் பிளே செய்யவும் யூஸர்களை அனுமதிக்கிறது. மேலும் இந்த இயர்பட்ஸ்கள் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டென்ஸிற்காக IP55 ரேட்டிங்கை பெற்றுள்ளன.