கூகுளின் செயல்பாட்டு உத்தி கூட்டம் அதன் தலைவர் சுந்தர் பிச்சை தலைமையில் கலிபோர்னியாவில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:- இந்த தருணத்தின் அவசரத்தை புரிந்து கொண்டு அனைத்தையும் உள்வாங்கி நிறுவனத்தை வேகமாக நடத்துவது ஊழியர்களின் கடமை. நிறுவனத்தின் வளர்ச்சியில் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.
2025-ம் ஆண்டில், AI தொழில்நுட்பத்தின் நன்மைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதிலும் பயனர் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் நாம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். இந்த புத்தாண்டில் கூகுளின் முதன்மையான குறிக்கோள் ஜெமினி செயலி மூலம் AI தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரைவாக விரிவுபடுத்துவதாகும். கடந்த சில மாதங்களாக பயனர்கள் மத்தியில் ஜெமினி செயலிக்கான வரவேற்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், இடைவெளியை மூடுவதற்கும், 2025-ல் முதலிடத்தை தக்கவைப்பதற்கும் சில வேலைகளை முடிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஜெமினியை 500 மில்லியன் பயனர்களைக் கொண்ட நுகர்வோர் தளமாக மாற்றுவது கூகுளின் மிகவும் லட்சிய இலக்குகளில் ஒன்றாகும். வரலாற்றில் எப்போதும் முதலிடத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீங்கள் நன்றாகச் செய்து முதல்தரப் பொருளை உருவாக்க வேண்டும். அது 2025-ல் நடக்கும் என்று நம்புகிறேன் என்றார் சுந்தர் பிச்சை.