May 4, 2024

அதிவேகத்தில் பந்து வீசிய இந்திய வீரர்… 156 கிமீ வேகத்தில் பந்துவீசி சாதனை

கவுகாத்தி,

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் உம்ரான் மாலிக்கும் ஒருவர். இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியில் 8 ஓவர்கள் வீசி 57 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் உம்ரான் மாலிக் மணிக்கு 156 கிமீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்தார். 14வது ஓவரில் அதாவது தனது 2வது ஓவரில் 156 கிமீ வேகத்தில் வீசினார். இதன் மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில், உம்ரான் மாலிக் மணிக்கு 155 கிமீ வேகத்தில் பந்துவீசி, பும்ராவை முந்தினார். இதற்க்கு முன் பும்ரா 153.36 கிமீ வேகத்தில் பந்து வீசினார். உம்ரான் மாலிக் ஐபிஎல் போட்டியில் 156.9 கிமீ வேகத்தில் பந்து வீசினார். மற்ற இந்திய வீரர்களில் முகமது ஷமி 153.3 மீ வேகத்தில் பந்துவீசியுள்ளார். மீட்டர் மற்றும் நவ்தீப் சைனி 152.85 கிமீ வேகத்தில் பந்து வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!