சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல், சமையல் காஸ் சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்கின்றன.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் இந்த விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வர்த்தக சிலிண்டர்களின் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.14.50 குறைந்து ரூ.1,966-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வந்த வர்த்தக சிலிண்டர்களின் விலை இந்த மாதம் குறைந்துள்ளது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ. 818.50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.