சென்னை : வார விடுமுறை தினமான இன்று கோழிக்கறி விலை குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கோழிக்கறி விற்பனை கடைகளில் குவிந்துள்ளனர்.
வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ₹104க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ₹8 குறைந்து ₹96க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் சிக்கன் விலை குறையும் என கூறப்படுகிறது.
மேலும், முட்டை கொள்முதல் விலை 415 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ₹70 ஆகவும் நீடிக்கிறது. விடுமுறை தினமான இன்று பொதுமக்கள் அசைவ உணவிற்காக கோழிக்கடைகளில் குவிந்து வருகின்றனர்.
இதேபோல் ஆட்டுக் கறி விரும்பி சாப்பிடும் அசைவ பிரியர்கள் அதன் விலை உயர்ந்துள்ளதால் கவலை அடைந்துள்ளனர்.