சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிகரித்தது. அதன்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 105 அதிகரித்து ரூ. 8,340 மற்றும் பவுனுக்கு ரூ. 840 அதிகரித்து ரூ. 66,720 -க்கும் விற்பனையாகிறது.

கடந்த 4 நாட்களில் ஒரு பவுனுக்கு ரூ.1,240 அதிகரித்துள்ளது. இதேபோல், 24 காரட் தூய தங்கம் ரூ. 72,664-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ரூ. 3 முதல் ரூ. 111-க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளிக் கட்டிகளின் விலை ரூ. 1,14,000 ஆக உள்ளது.