நியூயார்க்: வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை வாங்கும் முயற்சியிலிருந்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பின்வாங்கியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை வாங்கும் முயற்சியிலிருந்து பின்வாங்கியுள்ளது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம். இது தொடர்பாக பேரத்தில், வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தின் ஒரு பங்குக்கு 31 அமெரிக்க டாலர் வரை வழங்க பாரமவுண்ட் ஸ்கைடான்ஸ் (Paramount Skydance) நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
அந்த விலையை விட அதிக தொகைக்கு பங்குகளை வாங்கினால் லாபகரமாக இருக்காது என்பதால், நெட்ஃபிளிக்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை பாரமவுண்ட் ஸ்கைடான்ஸ் நிறுவனம் வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவுள்ளது.
இந்த முடிவுக்குப் பிறகு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 10 சதவீதம் உயர்ந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.