தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அது சாமானிய மக்களின் வாழ்கையை பெரிதும் பாதிக்கின்றது. ஒரு காலத்தில் முதலீட்டிற்காக பார்க்கப்பட்ட தங்கம், இப்போது எட்டாக்கனியாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களில் பங்குச்சந்தை நிலைமையை கட்டுப்படுத்தியதால், தங்கத்தின் விலை ஓரளவுக்கு தாழ்ந்தது. ஆனால் அந்த சலுகை நிலை நீடிக்கவில்லை.
மே 17ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.8,720 ஆக இருந்தது. அதேநேரம் ஒரு சவரன் ரூ.69,760க்கு விற்பனை செய்யப்பட்டது. இது வாடிக்கையாளர்களுக்கு சிறிய நிம்மதியை ஏற்படுத்தியது. ஆனால் இன்று மே 19 ஆம் தேதி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தற்போதைய விலைப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.8,755 ஆகவும், ஒரு சவரன் ரூ.70,040 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த உயர்வின் காரணமாக பொதுமக்கள், குறிப்பாக திருமண நிகழ்ச்சிகளை திட்டமிட்டவர்கள், பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். 18 காரட் தங்கத்திலும் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ₹7,210 ஆகவும், ஒரு சவரன் ₹57,680 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
விலை உயர்வு வெள்ளியிலும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்த நிலையில் உள்ளது. தற்போது ஒரு கிராம் வெள்ளி ₹109 என்றும், ஒரு கிலோ வெள்ளி ₹1,09,000 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
உலக பொருளாதாரம் மீண்டும் சீராக உள்ளதாலும், போர் பதற்றம் குறைந்திருப்பதாலும் தங்க விலை தாழும் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் விலை உயர்வடைந்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மக்கள் தங்க முதலீட்டில் சிக்கனமாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.