வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. உலகச் சந்தைகளின் போக்குகளைத் தொடர்ந்து இந்தியச் சந்தையும் ஆரம்பம் முதலே ஏற்றத்தைக் கண்டது. அதானி, ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி, வங்கிகள் போன்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி பெரிய நிறுவனங்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இது புள்ளிகள் அதிகரிக்க வழிவகுத்தது. நிஃப்டி குறியீட்டில், நுகர்வோர் ஸ்டேபிள்ஸ் மற்றும் மருந்து நிறுவனங்கள் தவிர அனைத்து துறை பங்குகளும் உயர்ந்தன. பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பங்குகளும் கிட்டத்தட்ட 2.5 சதவீதம் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் 2,738 பங்குகள் உயர்ந்தன, 1,227 நிறுவனப் பங்குகள் சரிந்தன, 102 பங்குகள் மாறாமல் இருந்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.3,665 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர். உலகளாவிய கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 1.13 சதவீதம் அதிகரித்து 72.64 அமெரிக்க டாலராக உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.84.69 ஆக உள்ளது.
நிஃப்டி 50 குறியீட்டில் அதானி போர்ட்ஸ், என்டிபிசி, அதானி எண்டர்பிரைசஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன. பார்தி ஏர்டெல், ஹீரோ மோட்டோகார்ப், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி லைஃப் மற்றும் சன் பார்மா ஆகியவை அதிக நஷ்டம் அடைந்தன.