இந்தியப் பங்குச் சந்தை குறியீடுகள் தொடர்ந்து மூன்று நாட்கள் சரிவுக்குப் பிறகு வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் ஏற்றம் கண்டன. இருப்பினும், வாரத்தின் ஒட்டுமொத்த அடிப்படையில், சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவுடன் முடிவடைந்தன.
சந்தையின் குறியீடுகள் தொடக்க வர்த்தகத்தில் சரிவுடன் தொடங்கியது. பிற்பகல் வர்த்தகத்தின் போது, முதலீட்டாளர்கள் வங்கி, உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டினர். இதனால், சந்தை ஏற்றத்துடன் முடிந்தது.
நிஃப்டி குறியீட்டில், வங்கி, ரியல் எஸ்டேட் தவிர, ஆட்டோ உள்ளிட்ட பிற துறை பங்குகள் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் குறியீட்டில், 1,942 பங்குகள் லாபம் மற்றும் 1,933 பங்குகள் சரிவை சந்தித்தன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறினாலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் களமிறங்குவதால் சந்தை ஓரளவு மீண்டுள்ளது. உலக சந்தை குறியீடுகள் மற்றும் Q2 முடிவுகள் வரவிருக்கும் வார சந்தையின் போக்கை தீர்மானிக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேற்று ரூ.5,486 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். உலகளாவிய கச்சா எண்ணெய் விலை நேற்று ஒரு பீப்பாய்க்கு 0.07 சதவீதம் குறைந்து 74.40 அமெரிக்க டாலராக இருந்தது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 காசு குறைந்து ரூ.84.07 ஆக உள்ளது.
அதிக லாபம் ஈட்டியவர்கள்: ஆக்சிஸ் வங்கி, விப்ரோ, ஐஷர் மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ். மிகப்பெரிய சரிவு: இன்ஃபோசிஸ், பிரிட்டானியா, ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே இந்தியா, டெக் மஹிந்திரா.