புதுடெல்லி: மாருதி சுசூகி’ நிறுவனத்தின் செலிரியோ’ காரில் வந்த முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம், அதன் ‘செலிரியோ’ காரின் விலையை ரூ.16,000 வரை உயர்த்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.64 லட்சம் முதல் ரூ.7.37 லட்சம் வரை உள்ளது.
அத்துடன் முன்பை விட இந்த கார் பாதுகாப்பு அடிப்படையில் சிறந்ததாக மாறியுள்ளது. முன்னதாக, ‘செலிரியோ’-வின் அனைத்து வகை கார்களிலும் இரண்டு ஏர்பேக்குகள் மட்டுமே கிடைத்தது.
தற்போது 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால்தான் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.