சென்னை: தகவல் தொழில்நுட்பத் துறை வேலைக்காக இளைஞர்கள் சென்னைக்கு அதிகளவில் இடம்பெயர்வதை தடுக்க, தமிழக அரசு மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் மினி டைடல் பார்க்குகளை கட்டுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 50,000 சதுர அடியில் இருந்து 1 லட்சம் சதுர அடிக்குள் மினி டைடல் பார்க்குகள் கட்டப்படவுள்ளன.

இதை தொடர்ந்து, திருவண்ணாமலை, கரூர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தலா 55,000 சதுர அடியில் மினி டைடல் பார்க் கட்டப்பட உள்ளது. இந்நிலைமையில், இந்த மூன்று டைடல் பார்க் கட்டடங்களுக்கும், ஒப்பந்த நிறுவனம் வாயிலாக கட்டட வரைபடம் மற்றும் வடிவமைப்பை இறுதி செய்துள்ளது.
அதன் அடிப்படையில், கட்டுமானப் பணிகளை துவங்குவதற்கான ஒப்பந்த நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கையை அரசு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், ‘டெண்டர்’ கோர முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.