சென்னை: தங்கம் விலை நேற்று திடீரென சவரன் ஒன்றுக்கு ரூ.320 குறைந்தது. கடந்த 2-ம் தேதி தங்கம் விலை ரூ.53,360 ஆக குறைந்தது.
தொடர்ந்து 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. கடந்த 3-ம் தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் சவரன் ரூ.53,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.6,720-க்கும், சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.53,760-க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று தங்கத்தின் விலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மற்றொரு மாற்றம் ஏற்பட்டது.
அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,680 ஆகவும், சவானுக்கு ரூ.320 குறைந்து ரூ.53,440 ஆகவும் இருந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் சந்தைக்கு விடுமுறை.
எனவே, இன்றைய தங்கம் நேற்றைய விலைக்கே விற்கப்படும். நாளை சந்தை தொடங்கும் பிறகே தங்கம் விலையில் என்ன மாற்றம் இருக்கும் என்பது தெரியவரும்.