மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தை ஒரு சதவீதத்திற்கும் மேல் சரிவுடன் துவங்கியுள்ளது. வர்த்தகம் தொடங்கிய உடனேயே சென்செக்ஸ் 842 புள்ளிகள் சரிந்து 75,348 புள்ளிகளாக இருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகின. மதிய வர்த்தகத்தின் போது, சென்செக்ஸ் சற்று மீண்டு, 640 புள்ளிகள் சரிந்து 75,550 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி 265 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கி சற்று மீண்டது. நண்பகலில், நிஃப்டி 200 புள்ளிகள் சரிந்து 22,891 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 42 நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

வர்த்தகம் தொடங்கிய உடனேயே பங்குகளின் விலை கடுமையாக சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு ரூ.9 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. சென்செக்ஸ் 842 புள்ளிகளும், நிஃப்டி 265 புள்ளிகளும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே சமயம் மிட் கேப் குறியீடு 2.7 சதவீதமும், கேப் இன்டெக்ஸ் 4 சதவீதமும் சரிந்தது. சந்தையில் வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகளில் 3300 நிறுவனங்களின் விலை குறைந்தும், 490 நிறுவனங்களின் விலை ஏற்றமும் கண்டன.