கொலஸ்ட்ரால் என்பது நமது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் ஒரு பிரச்சனை. பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்கள், பொரித்த தின்பண்டங்கள் போன்றவற்றை அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியமற்ற கொழுப்புகளை அதிகரிக்கிறது. இதனால், இதய ஆரோக்கியம், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்னைகள் உருவாகின்றன. எனவே, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க வேண்டியது அவசியம்.
கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கான ஒரு வழியாக உணவுமுறையை வலியுறுத்த வேண்டும். கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் சில பழங்களை இந்தக் கட்டுரையில் காணலாம். ஆரஞ்சுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது தமனிகளில் பிளேக் படிவதைத் தடுக்க உதவுகிறது. பெர்ரிகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகின்றன.
மாதுளை இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது. பப்பாளி நமது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. வெண்ணெய் ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. ஆப்பிள் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து மாரடைப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.
நெல்லிக்காய் தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். தமனிகளில் பிளேக் உருவாவதைத் தடுக்கும் சத்துக்கள் கொய்யாவில் உள்ளன. இயற்கையாகவே கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆற்றல் திராட்சைக்கு உண்டு.
இந்தப் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், கொலஸ்ட்ரால் அளவுகளில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.