மும்பை: நடிகர் ரஜினி நல்ல நடிகரா என கேட்டால் எனக்குத் தெரியாது என விமர்சனம் செய்த பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளனர்
பிரபல பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் ரஜினியை விமர்சனம் செய்தது இணையத்தில் வைரலாகிறது.
அதில் பேசிய அவர், “ரஜினிகாந்த் நல்ல நடிகரா என கேட்டால் எனக்கு தெரியாது. அவர் வெறும் 18 பிரேம் கேமராவில் மட்டுமே நடிப்பார். ஸ்லோமோஷன் மட்டும் இல்லாமல் இருந்தால் ரஜினி என்ற நபரே இல்லாமல் போயிருப்பார்” என கூறியுள்ளார். இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
மேலும் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் ராம் கோபால் வர்மாவிற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இது அவரது விளம்பர மோகத்தை மட்டுமே காட்டுகிறது எனவும் தெரிவித்துள்ளனர்.