வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு இந்திய அணி கிட்டத்தட்ட ஒரு மாத ஓய்வுக்குப் பிறகு மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் இருந்து புஜாரா நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி டெஸ்ட் : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (விசி), கேஎஸ் பாரத் (வி.கே), இஷான் கிஷன் (வி.கே.), ஆர்.அஷ்வின், ஆர்.ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி.
இந்திய அணி ஒருநாள் தொடர் : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன் , இஷான் கிஷன் , ஹர்திக் பாண்டியா , ஷர்துல் தாக்கூர், ஆர்.ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.