May 6, 2024

குமாரசாமிக்கு தூது அனுப்புகிறதா பாஜக? குதிரை பேரம் ஆரம்பமா?

கர்நாடக மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இதுவரை 139 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 62 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா கட்சி 20 தொகுதிகளிலும், மற்றவை 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

மதச்சார்பற்ற ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பலர் பாஜக கூட்டணியில் இணைந்தால் அவர்களுக்கு 89 இடங்கள் வரை கிடைக்கும். ஆட்சி அமைக்க இன்னும் 27 இடங்கள் தேவைப்படுவதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு அணியை உடைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இப்போதே குதிரை பேரம் தொடங்கிவிட்டதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸில் இருந்து முதல்வர் பதவியால் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை இழுக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!