மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக கேம்சந்த் சிங் பதவியேற்றார்.
மணிப்பூர் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக யும்னம் கேம்சந்த் சிங் பதவியேற்றுக் கொண்டார்.
இம்பாலில் உள்ள மக்கள் மாளிகையில் ஆளுநர் அஜய் பல்லா முதலமைச்சர் கேம்சந்த் சிங்கிற்கு பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்ட நிலையில் முதல்வராக கேம்சந்த் சிங் பதவியேற்றுள்ளார்.