சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில் நடத்தும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 14 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு உணவு, உடை மற்றும் தங்குமிடத்துடன் மாதந்தோறும் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்.
ஓதுவார் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்று கோயிலின் இணை ஆணையர்/நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.